திருவனந்தபுரம்: கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகத் தொடர்ந்து பெய்துவரும் பெருமழையால் வெள் ளத்தால் சூழ்ந்து கேரள மாநிலம் தனித் தீவாக மாறி இருக்கிறது. வெள்ளத்தில் சிக்கி இருக்கும் மக்கள் சமூக ஊடகங்கள் வழி யாக உதவிக்காகக் கூக்குரலிட்டு வருகின்றனர். தங்களின் இருப்பிடத்தைக் குறிப்பிட்டும் தாங்கள் எப்படிப்பட்ட ஆபத்தில் இருக்கிறோம் என்ப தைக் கூறியும் உதவிக்காக கேரள மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர். அதேசமயம் அரபு நாடுகள், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் மக்கள், தங் கள் உறவினர்களைக் காப்பாற்றக் கூறி, சமூக ஊடகங்களில் கண் ணீர்மல்க கோரிக்கை விடுத்துள் ளனர். தொலைக்காட்சி வாயி லாகவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, கேரளாவில் கடந்த ஒரு வாரத்துக் கும் மேலாக மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதுவரை மழை, நிலச்சரிவு உள்ளிட்ட பாதிப்புகளில் சிக்கி 70க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் உள்ள 39 அணை களில் 35 அணைகள் முழுக் கொள்ளளவை எட்டியதால் திறந்துவிடப்பட்டுள்ளன. இத னால் 14 மாவட்டங்கள் வெள்ள நீரில் மிதக்கின்றன. வீடுகள், வர்த்தக நிறுவனங் களுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மாடிகளில் மக்கள் தஞ்சமடைந் துள்ளனர். சாலையில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
இந்நிலையில், வெள்ளநீர் சூழப் பட்ட வீடுகளில் சிக்கி இருக்கும் மக்கள் தங்களை மீட்கக் கோரி வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் காணொளி எடுத்தும் புகைப்படம் எடுத்தும் பகிர்ந்து வருகின்றனர். சிலர் கூகள் மேப் மூலம் தாங்கள் சிக்கி இருக்கும் இடத்தை நண்பர் களுக்கும் உறவினர்களுக்கும் தெரிவித்து காப்பாற்றக் கோரி யுள்ளனர். கேரள மாநிலத்தில் உள்ள பல் வேறு தொலைக்காட்சி ஒளிவழி கள், வெள்ளத்தில் சிக்கி இருக் கும் மக்களுக்கு உதவுவதற்காக கைத்தொலைபேசி எண்களை ஒளிபரப்பி வருகின்றன.
இந்த எண்களைத் தொடர்பு கொண்டால் மீட்கப்படுவார்கள், உதவிகள் வந்து சேரும் என்று செய்திகள் தெரிவித்து வருகின் றன. மேலும், கொச்சி அருகே அதானி பகுதியில் 2 மாதக் குழந் தையுடன் ஒரு குடும்பத்தினர், வீட்டின் கூரையில் அமர்ந்து உதவி கோருவது போன்ற காட்சி வாட்ஸ் அப்பில் வெளி யாகியுள்ளது.
எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கொச்சியின் எல்லூர், முப்பத்தாடம் பகுதியில் வசிக்கும் மக்களை மீட்கும் பணி தொடர்கிறது. தீயணைப்புப் படையினர், பாதுகாப்புப் படையினர் இரவு பகல் பாராமல் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். படம்: ஏஎஃப்பி