தங்களின் சேவையைப் பெறும் வாடிக்கையாளர்களுடன் செய்யப் படும் ஒப்பந்தங்களில் ஒரேவித மான நடைமுறைகள் அமையவேண் டும் என்று 80 பாதுகாப்பு நிறுவ னங்கள் தொழில்சார்ந்த விதிமுறை களை வரையறுக்க ஒருங்கி ணைந்துள்ளன. குறித்த நேரத்தில் கட்டணம் செலுத்துவது, சர்ச்சைகளுக்குத் தீர்வு காண்பது, சேதங்களுக்கான இழப்பீடு வழங்குவது, ஒப்பந்தங் களை ரத்து செய்வது போன்றவை இதில் அடங்கும். நியாயமற்ற நடைமுறைகளைக் கொண்ட வாடிக்கையாளரின் கோரிக்கைகள் குறித்து எல்லா பாதுகாப்பு நிறுவனங்களுக்கும் தெரிவிக்கப்படுவதுடன் விவகாரத் திற்குத் தீர்வு காணும்வரை அந்த வாடிக்கையாளருடன் எவ்வித வியாபாரத் தொடர்பும் செய்யக் கூடாது என்று நிறுவனங்கள் உறுதி எடுத்துள்ளன.
இது குறித்துச் சான்றளிக் கப்பட்ட பாதுகாப்பு அமைப்புகள் சங்கம், சிங்கப்பூர் பாதுகாப்புச் சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்த 80 உறுப்பினர்கள் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கையெழுத்திட்டனர். ஒவ்வொரு சங்கமும் சிங்கப் பூரில் உள்ள சுமார் 248 பாதுகாப்பு நிறுவனங்களின் பாதி எண் ணிக்கையைப் பிரதிநிதிக்கிறது என்று சிங்கப்பூர் பாதுகாப்புச் சங் கத்தின் தலைவர் திரு ராஜ் ஜோஷ்வா தாமஸ் கூறினார். அதோடு வாடிக்கையாளர் களைப் பெறப் போட்டியிடுவதை நிறுத்திக்கொண்டு அணுக்கமாக ஒத்துழைக்கவும் இரு சங்கங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன. ஒரே தொழில்சார்ந்த, ஒரே சங்கமாகச் செயல்படுவதே இந்த ஒப்பந்தத்தின் இலக்கு. மற்றுமோர் நிகழ்வில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் அவர்களின் முதலாளிகளுக்கும் இடையே ஏற் படக்கூடிய வேலை தொடர்பான சர்ச்சைகள், வேலையிடத்துக் குறைபாடுகள் ஆகியவற்றைத் தீர்க்கும் சமரசச் சேவையை சிங்கப்பூர் பாதுகாப்பு ஊழியர்கள் சங்கமும் சர்ச்சை நிர்வாகத் துக்கான முத்தரப்புக் கூட்டணியும் தொடங்கி வைத்துள்ளன.