சிங்கப்பூரில் மாறுபட்ட இஸ்லாமிய சமய நடவடிக்கைகளைப் பிரபலப் படுத்த முயன்ற சிங்கப்பூர் ஜோடி ஒன்றின் மீது முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன் றம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த ஜோடி பற்றிய புகார் தங் களுக்குக் கிடைத்ததன் பேரில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது என்று முயிஸ் விளக்கியது.
ஃபஹாமான் யாயி அல்லது யாயி நம்பிக்கை என்ற பொருள் படும் இந்த 'சமயம்' குறித்து ஃபேஸ்புக் தளம் பல்வேறு செய்தி களை வெளியிட்டு வருவதைப் பற்றி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி தழ் எழுப்பிய கேள்விகளுக்கு முயிஸ் நேற்று பதிலளித்தது. யாயி நம்பிக்கையைத் தோற்று வித்தவர் பற்றிய தகவல்களும் அந்த ஃபேஸ்புக் பதிவில் இடம் பெற்றிருந்தன. அவர் ஒரு பெண் என்றும் 60 வயதைக் கடந்த அவரின் பெயர் பரிடா ஜயோஸ் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந் தது.