நாயகிகளைப் பார்த்து வியந்த படக்குழு

பல ஆண்டுகளுக்கு முன்பு வெளி யான 'நீயா' படத்தின் இரண்டாம் பாகம் இப்போது உருவாகி வருகிறது. இதில் ராய் லட்சுமி, வரலட்சுமி என இரண்டு நாயகிகள். நாயகனாக ஜெய் நடித்துள்ளார். இப்படத்தில் நடித்த அனுபவம் அலாதியானது என்று சொல்லும் ராய் லட்சுமி, ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்குப் பின்பு ஜெய்யுடன் ஜோடி சேர்ந்து நடிப்பது மகிழ்ச்சி தருவதாகச் சொல்கிறார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'வாமனன்' என்ற படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அச் சமயம் எடுக்கப்பட்ட சில புகைப் படங்களை ஜெய் இன்றளவும் வைத் துள்ளாராம்.

"அவரை (ஜெய்) 'ராக்ஸ்டார்' என்றுதான் அழைப்பேன். பதிலுக்கு அவர் என்னை 'உலக அழகி' என் பார். இருவரும் நீண்ட இடை வெளிக்குப் பிறகு சந்தித்திருக்கி றோம். எனவே நடிப்பின்போது கிடைத்த ஓய்வு நேரத்தில் பழைய சம்பவங்களைக் குறித்து மட்டுமே அதிகம் பேசினோம். "நாங்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஜெய் இன்றளவும் தனது கைபேசியில் வைத்திருப்பதைக் கண்டு ஆச்சரி யமடைந்தேன். சக கலைஞர் என்பதையும் மீறி நாங்கள் நெருங்கிய கூட்டாளிகளாகப் பழகுகிறோம்," என்கிறார் ராய் லட்சுமி. இப்படத்தில் நடிக்கும் மற் றொரு நாயகியான வரலட்சுமி யும், ராய் லட்சுமியும் நீண்ட காலத் தோழிகள். ஒரே படத் தில் இணைவது மகிழ்ச்சி அளிப்பதாக இருவருமே பூரிப்புடன் சொல்கின்றனர்.

"வரலட்சுமி ஒரு பொழுதுபோக்குப் பெட்ட கம். அவருடன் இருந் தால் பொழுது போவதே தெரியாது. "பொதுவாக இரு நாயகிகள் சேர்ந்தால் கலகம் மூளும் என்பார் கள். ஆனால் நாங்கள் சகஜமாகப் பேசிப் பழகி யதைக் கண்டு படக் குழுவினர் வியந்த னர்," என்கிறார் ராய் லட்சுமி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!