சிறப்புத் தேவையுடைய ஒன்பது வயது சிறுமியை ஐந்து மாதங் களாகத் துன்புறுத்திய குற்றத் திற்காக அத்திகா என்ற 25 வயது இந்தோனீசிய நாட்டுப் பணிப் பெண்ணுக்கு நேற்று எட்டு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பேச முடியாத, வளர்ச்சியில் குறைபாடு உடைய சிறுமியைக் கவனித்துக்கொள்ள அத்திகா சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பணிப்பெண்ணாகச் சிறுமி யின் பெற்றோரால் நியமிக் கப்பட்டார். சிறுமியைப் பார்த்துக்கொள் வதில் எரிச்சல் அடைந்த அத்திகா, இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை ஐந்து முறை சிறுமியை அடித்துத் துன்புறுத்தியதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.
மே 9ஆம் தேதியன்று இரவு எட்டு மணியளவில் சிறுமிக்கு கழிவறையைப் பயன்படுத்த உதவிய சமயம், சிறுமி தொட்டியில் வாந்தி எடுத்ததால் அத்திகா சிறுமியின் கையைக் கிள்ளினார். மற்றும் ஒரு சம்பவத்தில் சிறுமியைப் பலவந்தமான முறை யில் குளிப்பாட்டியதாகவும் சிறுமி முதுகைக் கீறியதாகவும் அதன் பின்னர் கழிவறைத் தரையில் சிறுமி சிறுநீர் கழித்ததனால் அத்திகா எரிச்சலடைந்து சிறுமியின் மேல் உதட்டைக் கிள்ளியதாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது. அதே நாளில் சிறுமியை அடித்ததாக அத்திகா ஒப்புக் கொண்ட பின்னர் சிறுமியின் தாயார் போலிசில் புகார் செய்தார்.