செல்சிக்கு எதிராக களமிறங்கும் செக்

லண்டன்: இங்கிலீஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் பருவம் தொடங் கிவிட்ட நிலையில், சிங்கப்பூர் நேரப்படி இன்று பின்னிரவு 12.30 மணிக்கு செல்சி, ஆர் சனல் அணிகள் ஸ்டாம்ஃபர்ட் பிரிட்ஜ் விளையாட்டரங்கில் பொருத உள்ளன. இந்த வார யிறுதியில் பெரும் எதிர்பார்ப் புக்கு மத்தி யில் நடைபெறும் முக்கிய ஆட்டங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இதில், ஆர்சனல் கோல் காப்பாளர் பீட்டர் செக், தமது முன்னாள் அணியான செல் சிக்கு எதிராக களமிறக்கப்ப டுவார் என்று ஆர்சனலின் புதிய நிர்வாகி உனாய் எமெரி உறுதி கூறியுள்ளார். நடப்புப் பருவத்தை முன் னிட்டு பயர் லிவர்கூசன் அணியி டமிருந்து கோல்காப்பாளர் பென்ட் லீனோவை 22 மில் லியன் பவுண்ட் விலை கொடுத்து எமெரி வாங்கி இருந்தார்.

எமெரியின் புதிய விளை யாட்டு முறை தமக்கு சௌகரியமா க இருப்பதாக 36 வயது செக் கூறினார். கடந்த வாரம் இப்பருவத்தின் முதல் ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டியிடம் ஆர்சனல் 2=0 எனும் கோல் கணக்கில் தோல் வியைத் தழுவியது. இதில் செக் பலரின் குறைகூறலுக்கு ஆளாகினார். இருப்பினும், எமெரி அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். "செக் விளையாடிய விதம் எனக்கு மகிழ்ச்சி தருகிறது. முன்னணி கோல்காப்பாளராகத் திகழ அவரிடம் அனுபவம், தரம், ஆற்றல் நிறைந்துள்ளன. எனக்கு அவர்மீது முழு நம் பிக்கை உள்ளது," என்று செக்கை தற்காத்துப் பேசினார் எமெரி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!