மணிலாவில் ஓடுபாதையைவிட்டு விலகிச்சென்ற விமானம்

மணிலா: பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவிலுள்ள அனைத்துலக விமான நிலையத்தில் தரை இறங்கிய சியாமன் ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று ஓடுபாதையை விட்டு விலகிச்சென்றது. இருப்பினும் அந்த விமானத்தில் சென்ற 165 பேருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று விமான நிலைய அதிகாரிகள் கூறினர்,

சியாமன் ஏர் நிறுவனம் சைனா சவுத்தர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். வியாழக்கிழமை நள்ளிரவுக்குச் சற்று முன்னர், பலத்த மழை பெய்த வேளையில் தரையிறங்கிய விமானம் ஓடு பாதையைவிட்டு விலகிச் சென்றதாக அதிகாரிகள் கூறினர். அந்த விமானம் தரை இறங்குவதற்கு சற்று முன்பு அப்பகுதியில் வட்டமிட்டுப் பறந்ததாகவும் இரண்டாவது முறையாக அது தரை இறங்கியதாகவும் கூறப்பட்டது. அந்த விமானத்தில் சென்ற 157 பயணிகளும் 8 விமானச் சிப்பந்திகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக மணிலா விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறினார்.

ஓடுபாதையைவிட்டு விலகிய சியாமன் ஏர்லைன்ஸ் நிறுவனத் தின் 737-800 ரக விமானம். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!