அரசு பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப அறிவார்ந்த வகுப்புகள்

திண்டுக்கல்: தமிழகத்தில் அர சாங்க பள்ளிக்கூடங்களில் விரை வில் அதிநவீன தொழில்நுட்ப அறிவார்ந்த வகுப்புகள் தொடங்கப் படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித் துறைச் செயலர் உதயசந்திரன் திண்டுக்கல்லில் பேட்டி அளித் தார். மாணவர்களின் படைப்பாற்றல், சிந்தனைத்திறனை வெளிக் கொண்டுவரும் வகையிலும் வேலைவாய்ப்புச் சவால்களை உறுதியோடு எதிர்கொள்ளும் வகையிலும் புதிய பாடத்திட் டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பாடப்பகுதிகள் தொடர்பான கருத்து, காணொளிகள், தீர்வுகள், கேள்வி, பதில்களை, 'கியூஆர் கோடு' மூலம் காணும் வசதி செய் யப்பட்டுள்ளது. இதை ஒருநாளில் இரண்டு லட்சம் பேர் வரை பதிவிறக்கம் செய்யமுடியும்.

பாடம் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய இணையத் தள முகவரியும் உள்ளது. இந்த முறையை மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகாவில் செயல் படுத்த முயற்சி இடம்பெற்ற போதி லும் முதல்முறையாக, தமிழகத்தில் தான் இது செயல்படுத்தப்பட்டு உள்ளது. ஆசிரியர்கள் கற்றல் வழி மட்டுமின்றி, காணொளிகள் மூல மாகவும் பாடங்களை நடத்தலாம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!