சென்னை: தமிழ்நாட்டில் நாமக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், திருச்சி, தர்மபுரி ஆகிய மாவட்டங் களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சுமார் 2,538 பேர், 35 நிவாரண முகாம்களில் தங்கவைக் கப்பட்டு இருக்கிறார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கேரளாவிலும் கர்நாடகாவிலும் தொடர் மழை பெய்து வருவதன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து 2.1 லட்சம் கனஅடிக்கும் மேல் தண்ணீர் இரண்டு நாட் களுக்குள் மேட்டூர் அணையை வந்தடையும் என்றும் இந்த நீர் வரத்து இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என்றும் மத்திய நீர்வள ஆணையம் அபாயச் சங்கு ஊதிய தையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மூத்த அதிகாரிகளு டன் பரபரப்பாக விவாதித்தார்.
வட்டார நிலையிலான கண்காணிப்புக் குழுக்களை அமைக் கும்படியும் தமிழ்நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படியும் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு பிறப்பித்து இருப்பதாக அரசாங்கத்தின் அறி விப்பு தெரிவித்தது.
ஈரோடு மாவட்டத்தில் பவானி கூடுதுறையில் உள்ள சங்கமேஷ்வரர் கோயில் பாதி மூழ்கிவிட்டது. (உள்படம்) நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிப்பாளையத்தில் ஆற்று நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்படுகிறார்கள். படங்கள்: தமிழக ஊடகம்