திருவனந்தபுரம்: கேரளாவில் பணிபுரியும் மதுரையைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி எம்ஜி. ராஜ மாணிக்கம், கடந்த 10 நாட்களாக வீட்டுக்கே செல்லாமல் தமிழகத் தில் இருந்து நிவாரணப் பொருட் களைப் பெற்றுக்கொடுப்பதும், மீட்புப்பணியில் ஈடுபடுவதுமாக செயல்பட்டு வருகிறார்.
பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக, கேரள அரசுகள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எதிரும் புதிருமாக செயல்படுகின்றன. அதேவேளையில், இரு மாநில மக் களும் நெருக்கடி காலங்களில் ஒருவருக்கொருவர் உதவிக்கொள் வதும் தொடருகிறது. அதற்கு உதாரணம் சென் னையைப் புரட்டிப்போட்ட வர்தா புயலையும் தற்போது கேரளாவைச் சூழ்ந்துள்ள வெள்ளத்தையும் குறிப்பிடலாம். சென்னையில் வெள்ளம் ஏற் பட்டபோது, கேரள மக்கள் தமிழ கத்துக்கு நிவாரணப்பொருட்களை அனுப்பி வைத்தனர்.
அதேபோல், கேரளாவில் தற் போது வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்குத் தமிழக மக்கள் அரிசி, துணிமணிகள், பாத்திரங் கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைக்கின் றனர். கேரளாவில் கனமழை காரணமாக அனைத்து அணை களும் நிரம்பிவிட்டதால் வரலாறு காணாத பேரழிவு ஏற்பட்டு சுமார் 2 லட்சம் மக்கள் வீடு, உடைமை களை இழந்து நிவாரண முகாம் களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கேரளாவில் பணிபுரியும் மதுரையைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்ஜி. ராஜ மாணிக்கம், தனது நண்பர்கள் உதவியுடன் சொந்த மாவட்டமான மதுரையில் இருந்தும் தமிழகத் தின் பிற மாவட்டங்களில் இருந் தும் தமிழக மக்களும் தன்னார்வ அமைப்பினரும் வழங்கும் வெள்ள நிவாரணப் பொருட்களை ஒருங் கிணைத்து அவற்றை வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொண்டு சேர்த்து வருகிறார்.