You are here

சண்முகம்: பல துறை ஒத்துழைப்பு அவசியம்

இயற்கைச் சீற்றங்களின் மிரட் டலுக்கு இடையில் பேரிடர் நிர் வாகக் கொள்கைகளை ஆசியான் வலுப்படுத்த வேண்டும் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் நேற்று கூறினார். பேரிடரைத் தொடர்ந்து அதிலி ருந்து மீளும்போது வெவ்வேறு துறைகளை இணைத்துக்கொள் வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று பேரிடர் நிர்வாகத் துக்கான நான்காவது ஆசியான் உத்திபூர்வ கொள்கை உரை யாடலின்போது திரு சண்முகம் தெரிவித்தார்.

ஆசியான், ஐக்கிய நாடுகள், தனியார் பிரிவு, அரசாங்க சார்பற்ற அமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் 160 பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். பேரிடரில் நெருக்கமானவர் களை இழந்ததால் மனதளவில் ஆழமாகப் பாதிக்கப்படுவோர், முதியோர், ஊனமுற்றோர், இளை யர்கள் ஆகியோருக்குச் சமூக நலத் துறை சமூகப் பாதுகாப்பும் ஆலோசனையும் வழங்கலாம். அவசரகால தயார்நிலையிலும் பேரிடர் நிர்வாக முயற்சிகளிலும் உதவ கல்வித் துறை, இளையர் களுக்குப் பயிற்சி அளிக்கலாம். பேரிடர் இடர்நிலை நிதியளிப்பு உத்திகளைச் செயல்படுத்தவும் பொருளியல் இழப்புகளை நிர் வகிக்கவும் பேரிடருக்குப் பின் புதுப்பிக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கவும் தனியார் நிறு வனத் துறை, அரசாங்கத்துக்கு உதவலாம்.

பேரிடர் நிர்வாகத்துக்கான வருடாந்திர ஆசியான் கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது சட்ட, உள்துறை அமைச்சர் திரு கா.சண்முகம் பேசினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்