சென்னை: மணல் அரிப்பு காரணமாக கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இரும்புப் பாலத்தில் திடீர் விரிசல் ஏற்பட் டுள்ளது. இதையடுத்து அந்தப் பாலம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காவிரியில் தற்போது 4 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுவதால் கரையோர மாவட்டங்க ளுக்குத் தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் 5 மாவட்டங்களில் மழை நீடித்து வருவதால் பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.
இந்நிலையில் திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இரும்புப் பாலத்தின் 6ஆவது தூணில் மணல் அரிப் பால் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்தத் தூண் ஆற்றுக்குள் இரண்டடி இறங்கி உள்ளது.
மணல் அரிப்பு நீடிக்கும் நிலையில் அந்தத் தூண் மெல்ல மெல்ல மண்ணில் புதைந்து வரு வதால் எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே திருச்சி, ஸ்ரீரங் கத்தை இணைக்கும் வகையில் காவிரியின் குறுக்கே கட்டப்பட் டுள்ள பாலத்திலும் விரிசல் ஏற் பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பாலம் உடைந்துவிடுமோ என கவலையில் மூழ்கியுள்ளனர். புதுப்பாலம் என்று குறிப்பிடப் படும் இப்பாலத்தின் முதல் தூணில் சிறிய அளவிலான விரிசல் ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் பாலத்திற்கு ஆபத்து ஏதும் இல்லை என்றும் அங்கு ஆய்வு நடத்தியபின் பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ள பகுதி. படம்: தமிழக ஊடகம்