வேலூர்: மேடைப் பாடகரான தனது தந்தையை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற மகனைப் போலிசார் கைது செய்தனர். வாலாஜா பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார். ஐம்பது வயதான இவர் மேடைப் பாடகர் ஆவார். இசை நிகழ்ச்சிகள் நடத்துவதுடன், தாம் வசித்த பகுதியில் இசை வகுப்புகளும் நடத்தி வந்துள்ளார். அசோக்குமாருக்கு தனுஜாகுமாரி என்ற மனைவியும், பிரகதீஸ்வரன் (25 வயது), பிரசாத் (20 வயது) ஆகிய இரு மகன்களும் உள்ளனர்.
இந்நிலையில் அவருக்கும் மனைவி தனுஜாகுமாரிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்ததால் இருவரும் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று முன்தினமும் இருவருக்கும் இடையே தகராறு மூண்டுள்ளது. அப்போது மனைவி, பிள்ளைகள் குறித்து அசோக்குமார் தரக்குறை வாகப் பேசியதாகவும் இதனால் மூத்த மகன் பிரகதீஸ்வரன் கோபமடைந்ததாக வும் தெரிகிறது. மேலும் அசோக்குமார் மனைவியை அடித்ததாகவும் கூறப்படு கிறது. இதனால் ஆத்திரமடைந்த மகன் பிரகதீஸ்வரன் வீட்டில் இருந்த இரும்புக் கம்பியை எடுத்து வந்து தந்தையை சரமாரியாகத் தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த அசோக்குமார் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.