சென்னை: சென்னை அண்ணா நகர் பகுதியில் கடந்த சில மாதங் களாக 19க்கும் மேற்பட்ட தொடர் கொள்ளைகள் நடந்தன. அனைத் திலும் கிலோ கணக்கில் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், ரொக்கப் பணம் கொள்ளை அடிக் கப்பட்டது. இதுகுறித்து விசா ரணை நடத்திக் கொள்ளையர் களைப் பிடிக்க அண்ணா நகர் துணை ஆணையர் சுதாகர் உத்த ரவின் பேரில் ஏப்ரல் மாதம் தனிப் படைகள் அமைக்கப்பட்டன. 9 குற்றவாளிகள் இந்த கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது.
கொள்ளையர்கள் பிரபல கொள் ளையன் திருவாரூர் முருகனின் கூட்டாளிகள் என்பது தெரியவந் தது. திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், புதுச்சேரி ஆகிய இடங்களைச் சேர்ந்த இவர்கள் நீண்டநாட்களாக தேடப்பட்டு வந்த குற்றவாளிகள். இதில் போலிசாரின் தீவிர தேடுதலில் மணிகண்டன், ரகு, மூர்த்தி, கோபால் ஆகியோர் சிக்கினர். பிறகு முக்கிய குற்ற வாளியான தினகரன், லோகநாதன், காளிதாஸ் ஆகியோர் கைதாயினர்.
ஆந்திராவில் கொள்ளையடித் தால் கேரளாவுக்குத் தப்பிச் செல் வது, கர்நாடகாவில் கொள்ளை யடித்துவிட்டு தமிழகம் தப்பிவரு வது என்று நான்கு மாநில போலி சாருக்கு தண்ணீர் காட்டும் இவர் களில் ஏழு பேர் இதுவரை அண் ணாநகர் போலிசாரால் கைது செய் யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது நான்கு மாநிலங் களிலும் கோடிக்கணக்கில் கொள் ளையடித்த வழக்குகள் உள்ளன. இதில் இன்னும் திருவாரூர் முரு கன் உட்பட இருவர் சிக்கவில்லை. கைதான தினகரனிடமிருந்து 3 கிலோ தங்கக்கட்டிகள், 5 கிலோ வெள்ளிப் பொருட்கள், 1000 அமெ ரிக்க டாலர்கள், ஒரு சொகுசுக் கார், 3 வாக்கி டாக்கிகளை போலி சார் கைப்பற்றினர்.
பூட்டிக்கிடக்கும் வீடுகளை நோட்டமிடும் இவர்கள் அந்த வீட்டில் பூட்டுக்கு இடையே விளம் பரம் செய்யும் நோட்டீஸ் அல்லது ஏதாவது தாளைச் செருகிவிட்டு சென்றுவிடுவார்கள். தொடர்ந்து இரு நாட்களுக்கு மேல் தாள் எடுக்கப்படாமல் இருந்தால் அந்த வீட்டில் உள்ளவர்கள் வெளியூர் சென்றுள்ளார்கள் என்பதை உறுதிப் படுத்திக்கொண்டு இரவில் அந்த வீட்டில் கொள்ளையடிப்பார்கள். சொகுசு காரில் வலம் வந்து இர வில் கொள்ளை அடிப்பதால் இவர் களை யாரும் சந்தேகப்படவில்லை.