ஜகார்த்தா: இந்தோனீசியாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே அந்நாட்டுப் போலிசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிவிட்டனர். விளையாட்டுப் போட்டிகளுக்கு இடையூறு விளைவிப்பவர் என்று சந்தேகிக்கப்படுவோர் மற்றும் சிறு சிறு குற்றங்கள் புரிவோரை ஒடுக்கும் விதமாக கடும் நட வடிக்கைகளை எடுத்து வருகின் றனர். அந்த வரிசையில் இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து இதுவரை 77 பேரை இந்தோனீசியப் போலிசார் சுட்டுக்கொன்றதாக அம்னாஸ்டி இன்டர்நேஷன் அமைப்பு கூறுகிறது.
போலிஸ் சோதனையின்போது மேலும் 31 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு கூறியது, போலிசாரின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அந்த அமைப்பு, பலர் சுட்டுக்கொல்லப் பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. கைது நடவடிக்கையின்போது போலிசாரை எதிர்த்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதி காரிகள் கூறியுள்ளனர்.