ஜகார்த்தா: பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 2016ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற சிங்கப்பூர் நீச்சல் வீரர் ஜோசஃப் ஸ்கூலிங், 23, இந்தோனீசியாவில் நடைபெற்று வரும் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் சாதிக்கக் காத்துக் கொண்டிருக்கிறார். 2014ஆம் ஆண்டு தென்கொரி யாவின் இஞ்ச்சியான் நகரில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீட்டர் வண்ணத் துப்பூச்சி பாணி நீச்சலில் தங்கம் வென்றிருந்தார் ஸ்கூலிங். அத் துடன், ஒரு வெள்ளிப் பதக்கத்தை யும் (50 மீ. வண்ணத்துப்பூச்சி பாணி) ஒரு வெண்கலப் பதக்கத் தையும் (200 மீ. வண்ணத்துப்பூச்சி பாணி) அவர் தனதாக்கியிருந்தார். இருப்பினும், ஒலிம்பிக்கில் தங்கம் வென்றபிறகு கடந்த இரு ஆண்டுகளாக இவர் சொல்லிக் கொள்ளும்படியாக பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை.
இந்த நிலையில், ஆசிய விளை யாட்டுப் போட்டிகள் மூலம் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்புவதில் ஸ்கூலிங் உறுதியாக இருக்கிறார்.
முதலாவதாக செவ்வாயன்று நடக்கவுள்ள 50 மீ. எதேச்சைபாணி நீச்சலில் போட்டியிடவிருக்கும் ஸ்கூலிங், "வெளியிலிருந்து வரும் அழுத்தங்கள் குறித்து நான் கவலைப்படவில்லை. என் மீது நான் கொண்டுள்ள அழுத்தம் பற்றி மட்டுமே நான் அக்கறை கொண்டுள்ளேன்," என்றார். பயிற்சியின்போது நன்றாக உணர்ந்ததாகக் கூறிய இவர், நடப்பதைப் பொறுத்திருந்து பார்ப் போம் என்றும் சொன்னார்.
வெற்றிப் பாதைக்குத் திரும்புவதில் உறுதியாக இருக்கிறார் சிங்கப்பூரின் தங்க மகன் ஜோசஃப் ஸ்கூலிங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்