விஜய், கார்த்திக் நீக்கம்; இந்தியா திணறல் ஆட்டம்

நாட்டிங்ஹம்: இங்கிலாந்து கிரிக் கெட் அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரு போட்டி களிலும் விராத் கோஹ்லி தலை மையிலான இந்திய அணி தோல் வியைத் தழுவியது. பந்தடிப்பா ளர்கள் சிறப்பாகச் செயல்படாததே இதற்குக் காரணம். இந்நிலையில், மூன்றாவது போட்டி நேற்று தொடங்கியது. இதில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய், விக்கெட் காப்பாளர் தினேஷ் கார்த்திக், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டனர். இரண்டாவது ஆட்டத்தில் வாய்ப்பு கிடைக்காத ‌ஷிகர் தவான் மீண்டும் சேர்க்கப்பட்டார்.

அறிமுக வீரராக அடியெடுத்து வைத்தார் இளம் விக்கெட் காப்பாளர் ரிஷப் பன்ட். காயத் திலிருந்து குணமடைந்து வேகப் பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா அணிக்குத் திரும்ப, இந்தியா வின் பந்துவீச்சு வரிசை மேலும் வலுவடைந்துள்ளது. முதலிரு போட்டிகளில் சிறப் பாக ஆடிய ஆல்ரவுண்டர் சேம் குர்ரன் இங்கிலாந்து அணியில் இருந்து நீக்கப்பட்டார். பென் ஸ்டோக்ஸ் அணிக்குத் திரும்பி யதே இதற்குக் காரணம். குர்ரனை நீக்கிய முடிவு விவா தத்தைக் கிளப்ப, "தலைவராக நான் எடுத்த மிகக் கடினமான முடிவு இதுதான்," என விளக்க மளித்தார் இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!