நடிகை சாயிஷா அண்மையில் பிறந்தநாள் கொண்டாடும்போது அனைவருக்கும் மதுபான பார்ட்டி கொடுத்தார். அதில் கலந்து கொண்டவர்கள் போதையில் மிதந்தனர். அந்தப் புகைப்படங்கள் வெளியாகி மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது சாயிஷா பற்றிய மற்றொரு சர்ச்சை கிளம்பியுள்ளது. பிரபல நடிகரும் நடனக் கலைஞரும் இயக்குனருமான பிரபுதேவா வுடன் இவர் மிக நெருக்கமாக இருக்கிறார் என்பதுதான் அந்தச் செய்தி.
பிரபுதேவா தன் மனைவியை விவாகரத்து செய்த பின் நயன்தாராவுடன் நெருக்கமாக இருந்தார். அவர்களின் உறவு திருமணம் வரை சென்று கடைசி நேரத்தில் முறிந்தது. தற்போது பிரபுதேவா, சல்மான்கானின் 'தபாங்க்-3' படத்தைத் தயாரிக்கும் வேலையில் உள்ளார். தமிழில் 4 படங்களில் நடிக்கிறார். பிரபுதேவா பற்றி இப்படி கிசுகிசு வருவது புதிதல்ல என்றாலும் தற்போது வளர்ந்துவரும் நடிகையாக இருக்கும் சாயிஷா சர்ச்சையில் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.