2023ஆம் ஆண்டுவாக்கில் சிங்கப்பூரில் மேலும் ஆறு பல துறை மருந்தகங்கள் இருக் கும். அதன்மூலம் பலதுறை மருந்தகங்களின் மொத்த எண்ணிக்கை 26க்கு உயரும் என்று பிரதமர் லீ தெரிவித்தார். செம்பவாங், யூனோஸ், காலாங், புக்கிட் பாஞ்சாங் ஆகிய பகுதிகளில் 2020ஆம் ஆண்டுக்குள் பலதுறை மருந்த கங்கள் அமையும். மேலும் இரு மருந்தகங்கள் 2023ஆம் ஆண் டுக்குள் நீ சூன் சென்ட்ரலிலும் தெம்பனிஸ் நார்த்திலும் கட்டப் படும்.
அதிகம் கட்டுப்படியாகக் கூடிய, நாடக்கூடிய, உயர்தரத் திலான அடிப்படை பராமரிப்பை சிங்கப்பூர் முழுக்க பெறுவோம். அண்மை ஆண்டுகளில் அங் மோ கியோ உள்ளிட்ட பகுதிகளின் பலதுறை மருந் தகங்கள் மேம்படுத்தப்பட் டதைச் சுட்டிய பிரதமர், இதர மருந்தகங்களும் மேம்பாடு காணும் என்றார். அங் மோ கியோ பலதுறை மருந்தகம் இப்போது பெரிய, சிறந்த ஒன்றாகவும் மேம்பட்ட சேவைகளுடனும் விளங்குவ தாக அவர் தமது தேசிய தினப் பேரணியில் தெரிவித்தார்.