புனே: காதலியைச் சமாதானப்படுத்த வாலிபர் ஒருவர் சாலையில் 300க்கும் மேற்பட்ட பதாகைகள் வைத்த சம்பவம் புனேயில் நடந்துள்ளது. புனே பிம்பிரி சிஞ்வட் பகுதியில் உள்ள சவுதாகரில் நேற்று காலை சாலையின் இருபுறங் களிலும் பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தன. முதலில் பொதுமக்கள் ஏதோ அரசியல் பிரமுகரை வரவேற்கத்தான் பேனர்கள் வைத்துள்ளார்கள் என நினைத்தனர்.
இந்த நிலையில் பொதுமக்கள் பதாகை அருகே சென்று பார்த்தபோது அதில் ஒரு பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டு மன்னித்துவிடு என எழுதியிருந்தது. இந்த நிலையில் சாலையில் வைக்கப்பட்டு இருந்த பதாகைகள் பாதசாரி களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக இருப்பதாக காவல்துறையினர் மற்றும் மாநகராட்சியிடம் சிலர் புகார் அளித்தனர். புகார் குறித்து போலிசார் நடத்திய விசார ணையில் நிலேஷ் (வயது 25) என்ற இளம் தொழில் அதிபர் தான் இந்தப் பதாகைகளை வைத்திருந்தது தெரியவந்தது.