குடும்பத்தை அழித்தவர்களை பழிவாங்கும் இளைஞனின் கதை

ஆதிக்பாபு நாயகனாக அறிமுகமாகும் படம் 'குற்றம் புரிந்தால்'. நாயகியாக அர்ச்சனா அறிமுகமாகிறார். இவர்களுடன் 'நாடோடிகள்' அபிநயா, எம்.எஸ்.பாஸ்கர், ராம்ஸ், நிஷாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். கே.எஸ்.மனோஜ் இசையமைக்கும் இப்படத்துக்கு கோகுல் ஒளிப்பதிவு செய்ய, கபிலன், கார்த்திக் நேத்தா ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் டிஸ்னி. "அடையாளம் தெரியாத நபர்களால் தனது குடும்பத்தினர் கொல்லப்பட்ட பிறகு, விரக்தியடைந்த இளைஞன் ஒருவன் தன் கைகளில் நீதியை எடுக்கிறான். அவன் கொலையாளிகளை மட்டுமல்லாமல், அவர்கள் சட்டத்தில் இருந்து தப்பிக்க காரணமாக இருந்தவர்களையும் தண்டிக்க குறி வைக்கிறான். அவன் தண்டித்தானா, இல்லையா என்பதை காதல், அடிதடி, குடும்ப உணர்வுகள் கலந்து சொல்லி இருக்கிறேன்," என்கிறார் இயக்குநர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!