பாலியல் கொடுமைகளை மையப்படுத்தி உருவாகிறது 'ஆறிலிருந்து 6 வரை'. இதில் கராத்தே கவுசிக் நாயகனாகவும், குஷ்பு சிங் நாயகியாகவும் நடித் துள்ளனர். இவர்களுடன் ஜெயபிரகாஷ், ஜார்ஜ், சாமி உள்ளிட்ட பலர் நடிக் கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஸ்ரீஹரி. காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நிகழும் சம்ப வங்களின் தொகுப்பு தான் கதையாம். பெண்களை பாலியல் கொடுமைகளுக்கு ஆட்படுத்துபவர்களுக்கு பாடம் கற்பிக் கும் வகையில் கதைக்களம் அமைக் கப்பட்டுள்ளதாம்.
"ஓர் இளம் பெண் பாலியல் ரீதியில் தொல்லைகளை எதிர்கொள்கிறார். அவற்றை எவ்வாறு கையாண்டு தப்பிக்கிறாள் என்பதை திகில் கலந்து விவரித்திருக்கிறோம். "கதைப்படி நாயகியை தன் ஆசைக்குப் பயன்படுத்த நினைக்கி றான் நாயகன். அவனது மனதில் உள்ள இந்தத் தவறான எண்ணத்தை அறிந்திராத நாயகி அவனுடன் இயல்பாகப் பழகுகிறாள். "இந்நிலையில் ஒரு நாள் நாயகியின் வீட்டுக்குச் செல்கிறான் நாயகன். அங்கு எப்படியும் அவளை அனுப வித்துவிட வேண்டும் என்பது அவன் திட்டம். ஆனால் நாயகியின் வீட்டில் அவன் காணும் காட்சி அதிர்ச்சி அடைய வைக்கிறது. "அதன் பிறகு அவனால் நாயகியை நெருங்க முடிந்ததா? அவனது எண் ணம் நிறைவேறியதா? என்கிற ரீதியில் கதை நகரும். இந்தப் படத்துக்காக நாயகி குஷ்பு சிங் உண்மையாகவே ரத்தம் சிந்தி நடித்துள்ளார்," என்கிறார் இயக்குநர் ஸ்ரீஹரி.
படப்பிடிப்பின் போது ஒரு நாள் காட்டு எருமைகளிடம் சிக்கிக் கொண்டாராம் குஷ்பு சிங். எருமை களைக் கண்டதும் படக் குழுவினர் சிதறி ஓடியுள்ளனர். அப்போது நாயகன் கராத்தே கவுசிக் சிறிதும் பயமின்றி அந்த எருமைகளை விரட்டி யடித்து குஷ்பு சிங்கை காப்பாற்றி னாராம். பெண் இசையமைப்பாளர் ஜீவா வர்ஷினி இப்படத்துக்கு இசையமைத் துள்ளார். இப்படம் வெளியானதும் பாலியல் கொடுமைகளை எதிர்க்கும் எண்ணம் மக்கள் மத்தியில் மேலும் அதிகரிக்கும் என்கிறார் ஸ்ரீஹரி.