You are here

தேசிய தினப் பேரணி உரை 2018: இல்ல மேம்பாட்டுத் திட்டம் விரிவாக்கம்

இல்ல மேம்பாட்டுத் திட்டம் மேலும் 230,000 வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்கு விரிவுபடுத்தப்படவுள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு அறிமுகம் கண்ட இல்ல மேம் பாட்டுத் திட்டம், 1987 முதல் 1997ஆம் ஆண்டு வரை கட்டப் பட்ட வீவக வீடுகளுக்கு விரிவு படுத்தப்படும்.

அங் மோ கியோவில் உள்ள தொழில்நுட்பக் கல்விக் கழக மத்திய கல்லூரியில் நேற்று தேசிய தினப் பேரணியை ஆற்றிய போது பிரதமர் லீ சியன் லூங் இதனை அறிவித்தார். இதையடுத்து, வீவக வீடுகள் அனைத்தும் அவற்றின் 99 ஆண்டு ஆயுட்காலத்தில் இரு முறை மேம்படுத்தப்படும். அதா வது, கட்டப்பட்டு 30 ஆண்டு களுக்குப் பின் ஒருமுறையும் 60 முதல் 70 ஆண்டுகளை எட்டும் போது இரண்டாம் முறையாகவும் வீவக வீடுகள் மேம்பாடு காணும்.

“1997ஆம் ஆண்டு வரை கட்டப்பட்ட வீவக வீடுகளின் முதற்சுற்று மேம்பாட்டுப் பணிகள் விரைவில் தொடங்கும். பாசிர் ரிஸ், ஈசூன், தெம்பனிஸ், ஜூரோங் உள்ளிட்ட பல பேட்டை களுக்கு இல்ல மேம்பாட்டுத் திட்டம் விரிவுபடுத்தப்படும்,” என்று பிரதமர் லீ தெரிவித்தார்.