பாலியல் தொல்லை: போலிஸ் பெண் அதிகாரி பரபரப்பு புகார்

சென்னை: காவல்துறை தலைவ ருக்கு நிகரான பொறுப்பில் உள்ள உயரதிகாரி ஒருவர் தமக்குப் பாலியல் தொல்லை கொடுப்ப தாகக் காவல்துறை பெண் கண் காணிப்பாளர் ஒருவர் புகார் எழுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் புகார் குறித்து விசா ரணை நடத்த குழு ஒன்று அமைக் கப்பட்டுள்ளது. அந்தப் பெண் அதிகாரி லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றி வருகிறார். ஐஜி அந்தஸ்தில் உள்ள அவரது உயரதிகாரி தொடர்ந்து தமக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக வும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து தமிழக காவல் துறை தலைவர் ராஜேந்திரன், தலைமைச் செயலர் ஆகிய இரு வருக்கும் அவர் புகார் கடிதம் அனுப்பி உள்ளார். தாம் லஞ்ச ஒழிப்புத் துறையில் சேர்ந்த நாள் முதலே அத்துறையின் ஐஜி தம் மிடம் தவறான நோக்கத்துட னேயே நடந்துகொண்டதாக புகாரில் அவர் கூறியுள்ளார். "சில சமயங்களில் ஆலோ சனை நடத்தவேண்டும் என அழைத்து தனது அறையில் வைத்து என்னைக் கட்டிப்பிடிக்க முயற்சி செய்துள்ளார். அவருக்கு உடன்பட மறுத்தபோதெல்லாம் மிரட்டல் விடுத்தார். வேலை நேரத்தில் ஆபாசமான குறுந்தக வல்கள், படங்களை அனுப்புவார்.

"பலமுறை தனது அறையில் வைத்து ஆபாசப் படங்களைக் காட்டி உள்ளார். அப்போதெல்லாம் தவறாக நடக்கவும் முயன்றுள் ளார்," என்று அந்தப் பெண் அதிகாரி தமது புகார் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தமிழக ஊட கம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஏழு மாதங்களாக மேலதிகாரி இவ்வாறு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்தப் பெண் போலிஸ் அதிகாரி கூறியுள் ளார். இந்த விவகாரம் காவல்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!