பெய்ஜிங்: மலேசியாவும் சீனாவும் இருதரப்பு உறவை மேலும் வலுப் படுத்தவும் வர்த்தகத் துறையில் ஒத்துழைக்கவும் இணக்கம் கண் டுள்ளதாக அவ்விரு நாடுகளின் பிரதமர்கள் தெரிவித்துள்ளனர். பெய்ஜிங்கில் சீனப் பிரதமர் லி கிகியாங்கை மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது சந்தித்துப் பேசிய பின்னர் இருவரும் செய்தி யாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். செய்தியாளர்களிடம் பேசிய திரு மகாதீர், சீனாவுடன் ஒத்துழைப்பதன் மூலம் மலேசியா அதிக நன்மைகளைப் பெற முடியும் என்றும் குறிப்பாக மின் வர்த்தகம் போன்ற உயர் தொழில்நுட்பத் துறைகளில் சீனாவின் நிபுணத் துவத் திறனை பெற முடியும் என்றும் கூறினார்.
"எங்களுக்கு கற்பிக்க சீனாவிடம் நிறைய உள்ளது. சீனாவுடன் பல துறைகளில் ஒத்துழைக்க நம்பிக்கை கொண் டுள்ளோம்," என்று திரு மகாதீர் கூறினார். சீனாவுடனான உறவை வலுப்படுத்திக்கொள்ள விரும்பும் அதே வேளையில் மலேசியாவின் நிதிப் பிரச்சினையை சீனா புரிந்துகொள்ள வேண்டும் என்றும் திரு மகாதீர் கேட்டுக்கொண்டார். மலேசியா எதிர்நோக்கும் பிரச் சினைகளை சீனா புரிந்து கொள்ளும் என்று தாங்கள் நம்புவ தாகவும் திரு மகாதீர் கூறினார். மலேசிய அரசாங்கத்திற்கு தற்போது 1 டிரில்லியன் ரிங்கிட் (S$340 பில்லியன்) கடன் இருக் கிறது. மலேசியாவின் கடன் சுமைக்கு முந்தைய நஜிப் ரசாக் கின் நிர்வாகமே காரணம் என்று திரு மகாதீரின் அரசாங்கம் கூறு கிறது.
பெய்ஜிங்கில் மக்கள் மாமண்டபத்தில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மலேசியப் பிரதமர் மகாதீரும் சீனப் பிரதமர் லி கிகியாங்கும் ராணுவ மரியாதை அணிவகுப்பை பார்வையிட்டனர். படம்: இபிஏ