You are here

வீட்டு உரிமையாளர்களின் வெவ்வேறான கருத்துகள்

பிரதமர் லீ தமது தேசிய தினப் பேரணி உரையில் புதிய திட்டங் களை அறிவித்தார். அதில் ஒன்று ‘வெர்ஸ்’ எனப்படும் விருப்பத் திற்கேற்ப முன்கூட்டிய மறுமேம் பாட்டுத் திட்டம். தேர்ந்தெடுக்கப் பட்ட குடியிருப்புப் பகுதியில் வசிப்பவர்கள் தங்களது 70 ஆண்டு பழமையான வீட்டை அர சாங்கத்திடமே திரும்ப விற்பதற்கு வாக்களிக்கலாம். பழைய பேட்டைகளைப் படிப்படி யாகப் பொலிவூட்டும் நீண்டகாலத் திட்டத்தின் ஒரு பகுதி அது. இத் திட்டம் தொடர்பான விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில் பொதுமக்களிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.

அதனை அறிய ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழ் சில குடியிருப் பாளர்களை நாடியது. தோ பாயோ லோரோங் 7, புளோக் 1ல் வசிக்கும் திருவாட்டி வெலென்டினா தாஸ் என்பவர் நெடுங்காலமாக தமது வீட்டில் வசிக்கிறார். 68 வயதான அந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர், ‘வெர்ஸ்’ திட்டம் மீது தமக்கு விருப்பமில்லை என் றார். அவரது புளோக் ஐம்ப தாண்டுகளைக் கடந்துவிட்டதால் ‘வெர்ஸ்’ திட்ட வாக்களிப்புக்கு அது தகுதி பெறலாம். இருபது குடியிருப்பாளர்களை அணுகிக் கருத்து கேட்டபோது அவர்களில் பத்து பேர் வெர்ஸ் திட்டம் வேண்டாம் என்று வாக்க ளிக்க விரும்புவதாகத் தெரிவித் தனர்.

கூடுதல் செய்தி: எஸ்.வெங்கடேஷ்வரன்

ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட வசதிகள். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம்