சிங்கப்பூருக்கு நான்கு நாள் அதிகாரத்துவப் பயணம் மேற் கொண்டிருக்கும் மியன்மார் அர சாங்க ஆலோசகர் திருவாட்டி ஆங் சான் சூச்சி நேற்று இஸ்தா னாவில் பிரதமர் லீ சியன் லூங்கையும் அதிபர் ஹலிமா யாக்கோப்பையும் சந்தித்துப் பேசி னார். சிங்கப்பூருக்கும் மியன்மா ருக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளை திருவாட்டி ஹலிமாவும் திருவாட்டி சூச்சியும் மறுஉறுதிப்படுத்தினர். திருவாட்டி சூச்சிக்கு இஸ்தானா வில் பிரதமர் லீ மதிய விருந்து அளித்து உபசரித்தார். இரு நாடுகள் எதிர்நோக்கும் பொருளியல் சவால்கள் உட்பட வட்டார, அனைத்துலக மேம் பாடுகள் குறித்து பின்னர் இருவ ரும் பேச்சுவார்த்தை நடத்தினர். திருவாட்டி சூச்சி துணைப் பிரதமர் டியோ சீ ஹியனையும் சந்தித்துப் பேசினார். அதன் பிறகு அவர் கிராண்ட் ஹயட் ஹோட்டலில் 43வது சிங்கப்பூர் விரிவுரையை நிகழ்த்தி னார்.
மியன்மார் அரசாங்க ஆலோசகர் திருவாட்டி ஆங் சான் சூச்சி நேற்று இஸ்தானாவில் பிரதமர் லீ சியன் லூங்கைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். படம்: திமத்தி டேவிட்