சோல்: கிட்டத்தட்ட 68 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த வடகொரிய மற்றும் தென்கொரிய மக்களில் சுமார் 150 பேருக்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சந்திக்கும் அரிய வாய்ப்பு கிடைத்தது. வடகொரியாவில் உள்ள உல்லாசத்தலத்தில் அவர்கள் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல ஆண்டுகள் பிரிந்திருந்தவர்கள் நேரில் சந்தித்தபோது பலருக்கு அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நான்கு வயது மகனை வடகொரியாவில் விட்டுவிட்டு அங்கிருந்து தென்கொரியாவுக்கு தப்பி வந்த ஒரு தாய் தன் மகனை நேரில் பார்த்தபோது கட்டி அணைத்து கண்ணீர் வடித்தார்.
அந்தத் தாய்க்கு தற்போது 92 வயதாகிறது. மகனுக்கு 71 வயதாகிறது. இவரைப் போல் இன்னும் பலர் தங்கள் பிள்ளைகளையும் உறவினர்களையும் நேரில் பார்த்து அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். 1950-53 ஆம் ஆண்டு நடந்த கொரியப் போரின்போது மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் குடும்பங்களைவிட்டுப் பிரிந்தனர்.
வடகொரியாவில் உள்ள உல்லாசத்தலத்தில் தென்கொரிய குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசிய பிறகு அங்கிருந்து செல்லும் வடகொரியர்கள். படம்: ராய்ட்டர்ஸ்