‘டூமெக்ஸ்’ குழந்தை பால்மாவில் கிருமி

முன்னணி நிறுவனத்தின் கைக்குழந்தைகளுக்கான பால் மாவு மாதிரிகளைச் சோதித்தபோது நுண்ணுயிர்க் கிருமி தென்பட்டதைத் தொடர்ந்து அந்த பால் மாவின் ஒரு பகுதி வேளாண் உணவு கால்நடை மருத்துவ ஆணையத்தால் மீட்கப்பட்டது. 850 கிராம் எடை கொண்ட 'டூமெக்ஸ் மாமில் கோல்ட் இன்ஃபான்ட் ஃபார்முலா-ஸ்டேஜ் 1' என்னும் பால் மாவில் காணப்பட்ட கிருமி குழந்தைகளின் உடல்நலத்தைப் பாதிக்கக்கூடியது எனத் தெரிவிக்கப்பட்டது. வழக்கமான உணவுப் பாதுகாப்புக் கண்காணிப்பின் போது இது கண்டறியப்பட்டதாக ஆணையம் வெளியிட்ட அறிக்கை கூறிற்று. இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு டூமெக்ஸ் சிங்கப்பூர் நிறுவனம் தனது ஃபேஸ்புக் பதிவில் இதுபற்றி குறிப்பிட்டது. இரண்டு மாதிரி டின்களில் நுண்ணுயிர்க் கிருமி கண்டுபிடிக்கப்பட்டது தனது கவனத்திற்குத் தெரிவிக்கப்பட்டதாக அப்பதிவில் கூறப்பட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!