தன் திறமைக்கு ஏற்ற சவாலான கதா பாத்திரங்கள் தேடி வரும் என்ற நம்பிக்கை இருப்பதாகச் சொல்கிறார் இளம் நாயகி மகிமா. 'குற்றம் 23', 'புரியாத புதிர்', 'நிலவுக்கு ஆயிரம் கண்கள்' என அடுத்தடுத்து 3 திகில் படங்களில் நடித்து முடித்திருப்ப வருக்கு திகில் கதைகள் என்றால் ரொம்ப விருப்பமாம். தற்போது தினேஷுடன் இவர் இணைந்து நடித்துள்ள 'அண்ணனுக்கு ஜே' படம் வெளியீடு கண்டுள்ளது. "இந்தப் படத்தில் சுந்தரி என்ற கிரா மத்துப் பெண்ணாக நடித்திருக்கிறேன். எந் நேரமும் கதாநாயகனுடன் சண்டை போட்டுக் கொண்டே இருக்கும் கதாபாத்திரம். ஊருக்கே கேட்பது போல் சத்தம் போட்டுப் பேசுகிற, அச்சு அசலான உள்ளூர்ப் பெண் ணாகவே இந்தப் படத்துக்காக மாறி விட்டேன். "என்னை எந்தளவு அழுக்காக காண் பிக்க முடியுமோ அந்தளவுக்கு அழுக்காகக் காட்டியுள்ளார் இயக்குநர்," என்று சிரிக்கிறார் மகிமா.
கிராமத்துப் பெண் வேடம் என்பதால் அறவே ஒப்பனையின்றி நடித்துள்ளாராம். 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத, இழவு வீடு, காதுகுத்து போன்ற நிகழ்ச்சிகளில் உள்ளூர் இசைக்குழுவில் ட்ரம்பெட் வாசிக்கும் பெண்ணாக நடித்துள்ளாராம்.
"சிறு வயது முதலே திகில் படங்களைத் தான் அதிகம் பார்ப்பேன். அதனால்தான் நான் தேர்வு செய்யும் படங்களிலும் அதன் பாதிப்பு இருப்பதாகத் தோன்று கிறது. அடுத்து என் நடிப்பில் வெளிவர உள்ள 'அசுரகுரு', 'ஐங்கரன்' ஆகியவையும் குற்றம் கலந்த திகில் கதைகள்தான்," என்கிறார் மகிமா. 'சாட்டை' படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் இவர். அதில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார். "இந்நிலையில் 'அண்ணனுக்கு ஜே' படத்தில் ஆசிரியை வேடம் ஏற்றுள்ளார்.