You are here

சிங்கப்பூர் பொதுப் போக்குவரத்து முறை உலகளவில் தலைசிறந்தது

சிங்கப்பூரின் குடிமக்கள் பொதுப் போக்குவரத்து முறையில் அதிகபட்ச மனநிறைவைத் தெரிவித்து உள்ளனர். மெக்கின்ஸி என்னும் ஆலோசனை சேவை நிறுவனம் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

‘வெற்றியின் அம்சங்கள்: 24 உலக நகரங்களின் நகரப் போக்குவரத்துமுறை’ என்னும் தலைப்பில் அந்நிறுவனம் ஜூன் மாதம் வெளியிட்ட அறிக்கையில் சிங்கப் பூர் மக்களின் கருத்து இடம்பெற்றுள்ளது. உலகின் தலைசிறந்த பொதுப் போக்கு வரத்து முறையைக் கொண்டிருக்கும் நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. இங் குள்ள பொதுப் போக்குவரத்து முறையின் ஒட்டுமொத்த நிலைமை குறித்து நிறு வனம் ஆய்வு நடத்தியது. அதில் பங் கேற்றோரில் 86 விழுக்காட்டினர் முழு திருப்தி தெரிவித்து உள்ளனர்.

“சிங்கப்பூர் பொதுப் போக்குவரத்து முறையையும் கடந்த சில ஆண்டுகளாக அது கண்டுவரும் மாற்றங்களையும் பொது மக்கள் பெரிதும் பாராட்டுகின்றனர். ஆய் வில் இடம்பெற்ற 14 அம்சங்களில் 13 அம்சங்கள் அவர்களுக்குத் திருப்தியைத் தந்துள்ளன,” என்கிறது ஆய்வறிக்கை. ஷங்காய், லண்டன், சோல், நியூயார்க் உள்ளிட்ட 24 நகரங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. நகரங்களின் அளவு, பொருளியல் வளர்ச்சி நிலை, போக்குவரத்து முறையின் சிறப்பம்சங்கள், கிடைக்கப்பெறும் தரவுகள் போன்றவற்றின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட தாக அறிக்கை குறிப்பிட்டது.

இந்நகரங்களுள் ஆகச்சிறந்த பொதுப் போக்குவரத்து முறையைக் கொண்டிருப் பதாகக் கருதப்படுவதால் சிங்கப்பூர், பெர்லின், ஹாங்காங் ஷங்காய் போன்ற வற்றை டோம்டோம் போக்குவரத்துக் குறியீடு போன்ற வெளி நிறுவனங்கள் தேர்வு செய்துள்ளன.