You are here

‘ஆண் தேவதை’

தனது ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் அறிவுரை சொல்லக் கூடியவர் என்று ரசிகர்கள் மத்தி யில் நல்ல பெயர் சம்பாதித்துள்ளார் சமுத்திரகனி. இவ்வாறு அறிவுரை கூறுவதை தனது கடமையாக நினைப்பதாக அவர் கூறியுள்ளார். தற்போது ‘நாடோடிகள்-2’ படத்தை இயக்கியபடியே சில படங்களில் முக்கிய கதாபாத்திரங் களில் நடித்தும் வருகிறார் சமுத் திரக்கனி. அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த ‘ஆண் தேவதை’, ‘வெள்ளை யானை’ ஆகிய இரு படங்களும் முடிந் துள்ளன. “அவரிடம் சமுத்திரக்கனி என்றாலே அறிவுரை சொல்பவர் என்ற பிம்பம் விழுந்திருக்கிறதே என்று கேட்டதற்கு “மற்றவர் களைப் போல் நானும் ஒரு எளிய மனிதன்தான். என்னைப் பொறுத்தவரை ரசிகர்களிடம் தெரிவிக்கும் நல்ல கருத்துகளை அறிவுரையாகப் பார்க்கவில்லை.

இது ஒரு வகையில் சமூகத்தின் மீதான அக்கறை. “சமுத்திரக்கனி என்றால் அறிவுரை சொல்பவன் எனும் பெயரை இவர்களாகவே வைத்து விட்டனர். என்னைப் பொறுத்த வரை இதை கடமையாகத்தான் நினைக்கிறேன். “கத்தினால் காதில் போய் விழும் எனும் நினைப்பில் கத்துகிறேன். அப்படி கத்தியும் யாரும் திரும்பவில்லை. “மக்கள் என் பக்கம் திரும்பும் வரை அப்படி கத்துவதுதான் என் முதன்மைப் பணியாக இருக்கும்,” என்கிறார் சமுத் திரக்கனி.