பொங்கோல் நகரின் வடகிழக்கு முனையில், ஜோகூர் நீரிணையை நோக்கி இருக்கும் நிலப்பரப்பில் பொங்கோல் பாயிண்ட் வட்டாரம் என்ற ஒரு புதிய பேட்டை அறிவார்ந்த, பசுமை சூழ்ந்த நகராக உத்தேசிக்கப்பட்டு இருக்கிறது என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் நேற்று அறிவித்தது. அந்த வட்டாரத்தில் வரும் நாட்களில் இரண்டு திட்டங்களில் வீடுகள் விற்பனைக்கு வருகின்றன. அவ்வீடுகளில் 2,000க்கும் மேற் பட்ட குடும்பங்கள் கடல் நீர்முகப்பு வாழ்க் கையை அனுபவிக்க வாய்ப்பு கிடைக்கும். புதிய வீட்டுத் திட்டங்களில் பொங்கோல் பாயிண்ட் கோவ் என்பது ஒன்று. இந்தத் திட்டத்தின்படி 1,172 வீடுகள் கட்டப்படும்.
பொங்கோல் பாயிண்ட் உட்ஸ் என்ற மற்றொரு திட்டத்தில் 940 வீடுகள் உருவாகும். இவை 2023ல் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2-023ல் செயல்படத் தொடங்கும் புதிய பொங்கோல் கோஸ்ட் எம்ஆர்டி நிலையத்திற்குப் பக்கத்தில் இந்த வீடுகள் அமைந்திருக்கும். பொங்கோல் பாயிண்ட் திட்டத்தில் பல மிக முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருக்கும். ஓல்டு பொங்கோல் ரோடு வழியாக இடம் பெறும் ஒரு புதிய மரபுடைமை உலாச் சாலை அந்த அம்சங்களில் ஒன்று. அந்த மரபுடைமைப் பாதை முன்பு விவ சாயிகளுக்கும் மீனவர்களுக்கும் முக்கிய போக்குவரத்து வழியாக இருந்து வந்தது. அது 1.5 கி.மீ. நீளம் இருக்கும். பாதசாரி கள் நடைவழியாக மாற்றப்படும் அந்தப் பாதை MyWaterway@Punggol முதல் பொங்கோல் படகுத் துறை வரை செல்லும். அந்தப் பகுதியில் முன்பு ஓடிய இரண்டே இரண்டு பேருந்துகளுக்கு இடம் அளித்து வந்த பழைய பேருந்து நிறுத்தம் அப்படியே கட்டிக்காக்கப்படும் என்றது கழகம்.
புதிய பொங்கோல் பாயிண்ட் வட்டாரம் முக்கியமான பல அம்சங்களைக் கொண்டிருக்கும். விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் முன்பு முக்கிய போக்குவரத்து வழியாக இருந்த 'ஓல்டு பொங்கோல் ரோடு' நெடுக ஒரு புதிய மரபுடைமை உலாச் சாலை அமையும். இது அந்தப் புதிய வட்டாரத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகத் திகழும். படம்: வீடமைப்பு வளர்ச்சிக் கழகம்