ஆர்ச்சர்ட் சாலையில் முன்னாள் வர்த்தகர் ஸெங் குவோயாங், 64, மற்றோர் ஆடவரிடம் முறைகேடாக நடந்துகொண்டதன் பேரில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். சம்பவம் குறித்த தகவல், மாலை 5.40 மணிக்கு கிடைத்த தாகப் போலிசார் தெரிவித்தனர். திரு ஸெங், சாலையோரத்தில் இசைக்கருவி வாசிப்பவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில், தனது ஒலிபெருக்கியின் இசை யைச் சத்தமாக ஒலிக்கச் செய்தார். அங்கே, இசைக்கருவி வாசித்துக் கொண்டிருந்த ஒருவர், திரு ஸெங்கிடம் ஒலியைக் குறைக் குமாறு கேட்டுக்கொண்டார்.
இதனால் ஆத்திரமடைந்த திரு ஸெங், புண்படுத்தும் சொற்களால் அவரைத் திட்டினார். பின்னர் திரு ஸெங் தன்னை அணுக வந்திருந்த போலிஸ் அதி காரிகளிடம் கூச்சலிட்டுப் பேசி, அமளியை ஏற்படுத்தியதாக போலிசார் தெரிவித்தனர். பலமுறை எச்சரிக்கப்பட்ட போதும் திரு ஸெங் தொடர்ந்து இவ்வாறு நடந்துகொண்டார். திரு ஸெங் கைதானதைக் காட்டும் காணொளி ஒன்று ஃபேஸ்புக்கில் நேற்று முன்தினம் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதுவரை அந்தக் காணொளி 200,000 முறைக்கு மேல் பார்க் கப்பட்டது.