You are here

ஹாக்கி: கோல் மழை பொழிந்துவரும் இந்தியா

ஜகார்த்தா: இந்திய ஆடவர் ஹாக்கி அணி 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் ஆட்டத்தில் 17-0 என்ற கோல் கணக்கில் இந்தோனீசியாவையும் அடுத்து 26-0 என ஹாங்காங் கையும் நொறுக்கித் தள்ளியது. இந்த நிலையில், நேற்று முன் தினம் ஜப்பானுக்கு எதிரான ஆட் டத்திலும் இந்தியாவின் கோல் வேட்டை தொடர்ந்தது.

ரூபிந்தர் பால் சிங்கும் மந்தீப் சிங்கும் ஆளுக்கு இரு கோல்களை யும் சுனில், தில்பிரீத் சிங், ஆகாஷ் தீப் சிங், விவேக் சாகர் ஆகியோர் ஆளுக்கு ஒரு கோலையும் அடிக்க, இந்தியா 8-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இன்று நடக்கவுள்ள ஆட்டத் தில் பலமிக்க தென்கொரியாவுடன் இந்தியா பொருதவுள்ளது.

ஜப்பானின் கைட்டோ தனக்காவிடம் இருந்து (வலது) பந்தைப் பறிக்க முயலும் இந்திய வீரர் மன்பிரீத் சிங். படம்: ஏஎஃப்பி