You are here

கபடி வீராங்கனையாக மாறுகிறார் கங்கனா

வித்தியாசமான சவாலான கதாபாத்திரங்கள் என்றால் கங்கனா ரணாவத்தை அணுகலாம் என்று இந்தி இயக்குநர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். படத்துக்குப் படம் ஏதாவது வித்தியாசத்தை தன் நடிப்பில் வெளிப்படுத்தியபடியே உள்ளார் கங்கனா. அடுத்து தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் கபடி வீராங்கனை வேடத்தில் நடிக்க உள்ளாராம். இதற்காக நிஜ கபடி வீராங்கனைகள் எத்தகைய பயிற்சிகளை மேற்கொள்வார்களோ அதையெல்லாம் கங்கனாவும் மேற்கொண்டு வருகிறார். “இந்தப் படத்தை அஸ்வினி ஐயர் திவாரி இயக்குகிறார். இவர் ஏற்கெனவே தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர்தான்.

தனுஷ் தயாரிப்பில் அமலா பால் நடித்த ‘அம்மா கணக்கு’ படத்தை இயக்கியவர். “தற்போது ஜான்சி ராணி லட்சுமி பாய் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கும் ‘மணிக்கர்னிகா’ படத்தில் நடித்து முடித்துள்ளேன். இந்தப் படம் ஜான்சி ராணியின் வாழ்க்கையைத் தவறாகச் சித்திரிக்கிறது என்பதில் துளியும் உண்மையில்லை. எனவே, எதிர்ப்பாளர்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். “இயக்குநர் அஸ்வினியின் படங்களை வெகுவாக ரசித்திருக்கிறேன். அவர் வித்தியாசமான படங்களை எடுக்க வேண்டும் என நினைக்கும் நல்ல படைப்பாளி. அதனால்தான் அவரது படங்களில் வாழ்க்கையின் எதார்த்தங்கள் எந்தவித போலித்தனமும் இன்றி அப்படியே பதிவாகின்றன. “கபடி வீராங்கனையின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் கதையை அவர் சொன்னதும் எனக்கு மிகவும் பிடித்துப்போனது. இந்தப் படத்தில் தேசிய அளவிலான கபடி வீராங்கனையாக நடிப்பதற்காக நிறைய பயிற்சிகள் எடுத்துள்ளேன்.