இந்தியாவில் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் தன் கூட்டணி பற்றி பாஜக வரும் அக்டோபர் மாதம் அறிவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் அமித் ஷா, இந்தத் தகவலை தமிழ்நாடு பாஜக பிரிவிடம் தெரிவித்து இருப்பதாக பாஜகவின் பேராளர் ஒருவர் குறிப் பிட்டார்.
இந்தியாவில் உத்தரப் பிரதேசம் (80), மகாராஷ்டிரா (48), மேற்கு வங்காளம் (42), பீகார் (40) ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில்தான் ஆக அதிகமாக 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
ஆகையினால் தமிழ்நாட்டில் கிடைக்கும் வெற்றி என்பது பாஜகவை பொறுத்தவரையில் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. தமிழ்நாட்டில் வரும் தேர்தலில் பாஜக கூட்டணி ஒன்றை அமைக் கும் என்றும் அது பற்றிய அறிவிப்பு அக்டோபரில் இடம்பெறும் என்றும் ஜூலை மாதம் தமிழ்நாட்டிற்கு வந் திருந்தபோது அமித் ஷா தங் களிடம் தெரிவித்ததாக அந்த பாஜக பேராளர் குறிப்பிட்டார். தன்னை யார் என்று தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார். எந்தக் கட்சியுடன் பாஜக சேரும் என்பதையும் அவர் தெரி விக்கவில்லை.
"திமுக தலைவராக இருந்த கருணாநிதியின் புதல்வர்களான ஸ்டாலின், அழகிரி ஆகிய இரண்டு பேருடன் தொடர்புகொள்ள கதவுகளைத் திறந்து வைத் திருக்கிறோம்," என்று பாஜகவின் வேறொரு பேராளர் குறிப்பிட்டார்.