இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் ஞாயிறு பின்னேரத் தில் நான்கு மாடி கட்டடம் ஒன்று இடிந்து விட்டது. குறைந்தபட்சம் 10 பேர் இடிபாடு களில் சிக்கி இருக்கிறார்கள் என்று அஞ்சப்படுகிறது. ஒருவர் மாண்டுவிட்ட தாக அதிகாரிகள் தெரிவித்தனர். இடிந்து விழுந்த கட்டடம் அரசாங் கத்திற்குச் சொந்தமானது. ஆதவ் என்ற பகுதியில் அது இருந்தது. மிகவும் மோச மான நிலையில் இருந்த அந்தக் கட்ட டத்தில் பலர் வசித்துவந்தனர். இடிபாடுகளிலிருந்து நான்கு பேர் காப்பாற்றப்பட்டுவிட்டதாக நேற்று தகவல் கள் தெரிவித்தன. மீட்புப்பணிகளில் ஏராளமான தீயணைப்பாளர்களும் தேசிய பேரிடர் நிவாரணப் பணி வீரர்களும் ஈடு பட்டுள்ளனர்.
ஏழை மக்கள் வீட்டுடைமைத் திட்டம் என்ற திட்டத்தின் கீழ் அந்தக் கட்டடத்தில் உள்ள இரண்டு புளோக்குகளில் 150 பேர் வசித்து வந்தனர். அதில் மொத்தம் 32 வீடுகள் இருந்தன. கட்டடம் இடிந்துவிடக்கூடிய நிலைக்கு வந்துவிட்டது என்றும் அதனால் எல்லாரும் வீட்டைவிட்டு வெளியேறும்படியும் அகம தாபாத் மாநகராட்சி குடியிருப்பாளர் களுக்கு அறிவிப்பு விடுத்திருந்தது.
பலரும் வெளியேறிவிட்டனர். ஆனால் மழை பெய்ததால் சிலர் மறுபடியும் அந்த வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். அந்த நேரத்தில் கட்டடம் இடிந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மீட்புப் பணிகள் தொடர்வதாக அதிகாரிகள் கூறினர். இடிபாடுகளில் பலர் சிக்கி இருக்கக் கூடும் என்பதால் மோப்ப நாய்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கட்டடம் இடிந்ததை அடுத்து 60 பேருக்கும் அதிக மீட்புப் பணியாளர்கள் இரவு நேரத்திலும் மோப்ப நாய்களுடன் பணியில் ஈடுபட்டனர். படம்: ராய்ட்டர்ஸ்