ஃபுளோரிடா: ஃபுளோரிடாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் துப்பாக்கிச்சூடு நடத் தியவர் உட்பட மூவர் உயிர் இழந்தனர். ஃபுளோரிடாவில் உள்ள 'ஜாக் சன்வில் லேண்டிங்' எனும் வணிக வளாகத்தில் காணொளி விளை யாட்டுப் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக் கிழமை மதியம் திடீரென ஒருவர் மக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இருவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்த னர். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
பால்டிமோரைச் சேர்ந்த 24 வயது டேவிட் கேட்ஸ் என்று போலிசாரால் அடையாளம் காணப்பட்டுள்ள துப்பாக்கிச் சூடு நடத் தியவர், பின்னர் அவர் தன் உயி ரையும் மாய்த்துக்கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத் திற்கு போலிசாரும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் விரைந்தன. "காயமடைந்த 11 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் துப்பாக்கிக் குண்டால் காயமடைந்த சிலரும் அடங்குவர்," என்று போலிஸ் அதிகாரி ஒருவர் கூறி உள்ளார். ஆனால், இச்சம்பவத்திற்கான காரணம் என்ன என்பது பற்றி கருத்துரைக்க அவர் மறுத்துவிட்டார்.