ஜகார்த்தா: பேட்மிண்டன் அரை இறுதிப் போட்டியில் தோற்ற இந் தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் வெண்கலப் பதக்கத்தோடு வெளியேறினார். ஆசிய விளையாட்டுப் போட்டி யில் நேற்று பெண்களுக்கான ஒற்றையர் பேட்மிண்டன் அரை யிறுதிப் போட்டிகள் நடைபெற்றன. இதில், முதல் ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால், சீன தைபே வீராங்கனைத் தாய் டிசுயிங்கை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சாய்னா, 17-21, 14-21 என்ற நேர்செட் களில் போராடித் தோல்வி அடைந்தார்.
இதனால் அவருக்கு வெண் கலப் பதக்கம் கிடைத்தது. ஆசிய போட்டியில் சாய்னா பெறும் முதல் பதக்கம் இதுவாகும். இதையடுத்து இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பிவி சிந்து, ஜப்பானின் அகானே யமகுச்சி ஆகியோர் பலபரீட்சை நடத்தினர். துவக்கம் முதலே ஆக்ரோஷ மாக ஆடிய சிந்து, முதல் செட்டை 21-17 எனக் கைப்பற்றி னார். இதற்குப் பதிலடி கொடுத்த அகானே யமகுச்சி 2வது செட்டை வசமாக்கினார். அதன் பின்னர் போட்டியின் முடிவை தீர்மானிக்கும் மூன்றா வது செட் ஆட்டத்தில் கடும் சவாலுக்கு மத்தியிலும் சிந்து 21-10 எனக் கைப்பற்றி அசத்தினார்.