பிரச்சினைகளை நினைத்துக் கொண்டே இருந்தால் எதையும் சாதிக்கமுடியாது என்கிறார் அமலா பால். பிரச்சினைகளில் இருந்து உரிய பாடத்தைக் கற்றுக்கொண்டால் மீண்டும் அத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டிய தேவை இருக்காது என்றும் அண்மைய பேட்டியில் தெரிவித்துள்ளார். காதல் திருமணம் செய்து விவாகரத்து பெற்றதால் மனம் சோர்ந்திருப்பதாக சிலர் தன்னைப் பற்றிக் கூறுவது அறவே தவறு என்கிறார் அமலா.
"தனிப்பட்ட வாழ்க்கையில் எனக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று நான் சொன்னால் அது நிச்சயம் பொய்யாகத்தான் இருக்கும். வருத்தப்படாமல் வாழ்வது என்பது சாத்தியமே இல்லை. ஆனால் வருத்தங்கள் என்னை முடக்கி விடவில்லை என்பதும் உண்மை. "நமக்கென்று ஒரு கனவைத் தேர்ந்தெடுத்து அதில் கவனம் செலுத்தினால் போதும். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் இரு தினங்கள் துக்கம் அனுபவித்துவிட்டு உடனே வெளியே வந்துவிட வேண்டும். அனைத்துத் துறைகளிலும் சாதனை புரிந்தவர்களின் வாழ்க்கையைக் கவனித்தால் இது புரியும்," என்கிறார் அமலா.