You are here

என்டியூவில் $180 மி. செலவில் ஆசியாவின் மிகப் பெரிய மரக்கட்டடம்

நன்யாங் அவென்யூவில் அமைந் துள்ள நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் இன்னும் ஐந்தாண்டுகளில் ஆசியாவிலேயே ஆகப் பெரிய மரத்தால் ஆன கட்டடம் ஒன்று கட்டப்படவிருக்கிறது. 40,000 சதுர மீட்டர் அளவில் அமையவிருக்கும் இந்த ஆறு மாடிக் கட்டடம் 2021ல் கட்டி முடிக்கப்படும் என்றும் $180 மில்லியன் செலவில் கட்டப்பட விருக்கும் இதில் நன்யாங் வர்த் தகப் பள்ளி அமையும் என்றும் பல்கலைக்கழகத்தின் தலைவர் சுப்பிரா சுரேஷ் நேற்று அறிவித்தார்.

மரத்தால் அமையவிருக்கும் இக்கட்டடமே நீடித்து நிலைக்கத் தக்க கட்டுமானத் திட்டங்களில் ஆக உயர்ந்த லட்சியத்திற்குரியது என்றும் அவர் கூறினார். பல்கலைக்கழகத்தின் கட்டடங் களில் 95 விழுக்காடு பசுமைக் குறி பிளேட்டினம்(Green Mark Platinum) என்ற சான்றிதழ் பெற்றுவிட்டதாகவும் உலகிலேயே மிகப் பசுமையான பல்கலைக்கழக வளாகமாகப் பெயர் எடுக்கவேண் டும் என்றும் அவர் பகிர்ந்துகொண் டார்.

$180 மில்லியன் செலவில் 40,000 சதுர மீட்டர் அளவுக்கு அமையவிருக்கும் ஆசியாவின் மிகப் பெரிய மரக்கட்டடம். படம்: ஆர்எஸ்பி ஆர்கிடெக்ஸ், பிலனர்ஸ், என்ஜினியர்ஸ் பிரைவெட் லிமிடெட்