You are here

நியூகாசலின் வெற்றியை பறித்த சொந்த கோல்

நியூகாசல்: நியூகாசல் காற்பந்துக் குழுவுக்கு எதிரான பெல்ஜியம் வீரர் ஈடன் ஹசார்ட்டின் அபார ஆட்டம் செல்சியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றது. இபிஎல் போட்டியின் தற்போ தைய பருவத்தில் செல்சிக்காக ஹசார்ட் களமிறங்கிய முதல் ஆட்டம் இது. உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளுக்குப் பிறகு ஹசார்ட் ரியால் மட்ரிட் குழுவிற்கு செல்லக் கூடும் என்று தகவல்கள் பரவிய நிலையில், செல்சியின் முதல் இரு இபிஎல் போட்டிகளிலும் அவர் களமிறக்கப்படவில்லை. இந்நிலையில், நேற்றைய போட்டியில் களமிறங்கிய முதல் நிமிடமே அவரது முழங்கையிலும் அதன் பிறகு வலது காலிலும் காயம் ஏற்பட்டது.

ஆனாலும் தாக்குதல் ஆட் டத்தில் விடாப்பிடியாக இருந்த செல்சி குழுவின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் இருந்தார் ஹசார்ட். தற்காப்பு ஆட்டத்திலேயே நியூ காசல் கவனம் செலுத்தியதால், முக்கால்வாசி ஆட்ட நேரம் கோல் எதுவும் இல்லாமல் சென்றது. செல்சியின் பெட்ரோ, சீசர், மொராட்டா உள்ளிட்டோர் கோல் போடும் வாய்ப்பைத் தவறவிட்ட னர். 70வது °நிமிடத்தில் அன் டோனியோ ருடிகர் உதைத்த பந்து கோல் கம்பத்தில் பட்டு திரும்பியது.