வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு வாங்க விரும்புவோர், அதற்காக தங்களின் மத்திய சேம நிதித் தொகையைச் செலவிடுவதில் நீக்குப்போக்கு அளிக்கும் வகை யில் புதிய அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. அதன்படி, வீடு வாங்க வீவக விடம் இருந்து கடன் பெறுவோர் தாங்கள் விருப்பப்பட்டால் தங் களது மசே நிதி சாதாரண கணக் கில் $20,000 வரை விட்டு வைக்கலாம். கழகம் நேற்று 5,101 புதிய வீடுகளை விற்பனைக்கு விட்டபோது இந்த அறிவிப்பையும் வெளியிட்டது.
முன்னதாக, வீடு வாங்கும் போது அவர்கள் தங்களின் மசே நிதி சாதாரண கணக்கிலுள்ள தொகையை முழுவதுமாகப் பயன்படுத்தியாக வேண்டும். "இனி, தேவைப்படும் சமயங் களில் அந்தப் பணத்தைக் கொண்டு வீட்டுக் கடனுக்கான மாதாந்திரத் தவணையைச் செலுத்த முடியும். அத்தொகை யைப் பயன்படுத்தாமல் வைத்து இருந்தால் அது ஓய்வுகாலத் திற்கான சேமிப்பை அதிகப்படுத் தும்," என்று வீவக தெரிவித் துள்ளது. அதே நேரத்தில், வீடு வாங்கு வோர் விருப்பப்பட்டால் தங்களின் சாதாரணக் கணக்கில் உள்ள தொகையை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். இப் போதைக்கு, மசே நிதி சாதாரணக் கணக்கிற்கான வட்டி விகிதம் 2.5%. வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் அதைவிட 0.1% அதிக மாக, அதாவது 2.6 விழுக்காடாக உள்ளது. மாறாக, பெரும்பாலான வங்கி கள் இப்போதைக்கு வீட்டுக் கடனுக்கு குறைந்த வட்டி விகி தத்தையே வழங்கி வருகின்றன. சந்தையின் ஏற்ற இறக்கத்தைப் பொறுத்தே அந்த வட்டி விகிதம் இருந்து வருகிறது. இருந்தாலும், வீவகவின் புதிய கொள்கை வீடு வாங்கு வோருக்குக் கூடுதல் தெரிவை வழங்குவதால் சொத்துச் சந்தை கவனிப்பாளர்கள் அதை வரவேற் றுள்ளனர்.