சீமெய் கிரீன் கண்டோமினிய கட்டடம் ஒன்றின் பணியாளர் களைக் கடந்த 2015ல் தாக்கிய குற்றத்திற்காக இரட்டைச் சகோ தரிகள் இருவருக்கு நேற்று அபராதம் விதிக்கப்பட்டது. சீன நாட்டவர்களான டாங் பெய், டாங் லெய் அப்போது வன்செயலில் ஈடுபட்ட காட்சி காணொளியில் பதிவாகி பின்னர் இணையத்தில் பரவியது. இப் போது அவர்கள் இருவருக்கும் 50 வயதாகிறது. அந்த கண்டோமினிய வளாகத் தைவிட்டு வெளியேறுவதற்காக வெளிவாயிலில் மற்ற குடியிருப் பாளர்களைப் பின்தொடர்ந்ததற் காக டாங் பெய் முன்னதாக பிடி பட்டார். அங்குள்ள கண்டோமினிய வீடு ஒன்றில் அவர் வாடகைதாரராக இருந்த போதிலும் அவரிடம் குடியிருப்பாளர் அனுமதி அட்டை எதுவும் இல்லை. கடந்த 2015ஆம் ஆண்டு முற்பகல் 11.40 மணிக்கு இந்தத் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்தது. பாதுகாவல் அதிகாரி ஒரு வருக்கு காயம் விளைவித்ததாக மூன்று குற்றச்சாட்டுகளையும் கண்டோமினிய நிர்வாகி ஒருவரைத் தாக்கியதாக இரு குற்றச்சாட்டுகளையும் டாங் பெய் எதிர்நோக்கினார்.
அந்தப் பாதுகாவல் அதி காரிக்கு காயம் விளைவித்ததாக நான்கு குற்றச்சாட்டுகளையும் கண்டோமினிய நிர்வாகியைத் தாக்கியதாக இரு குற்றச்சாட்டு களையும் அவரது சகோதரி எதிர்நோக்கினார். இதன் தொடர்பில் டாங் பெய்க்கு $2,100 தொகையும் டாங் லெய்க்கு $2,500யு தொகையும் அபராதமாக விதிக் கப்பட்டது.