சிங்கப்பூரில் தண்ணீர் பாதுகாப்பை உறுதிசெய்ய இங்குள்ள தண்ணீர் ஆலைகள் மேம்படுத்தப்படுவது அவசியம் என்று துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் தெரிவித் துள்ளார். சாங்கி தண்ணீர் சுத்திகரிப்பு ஆலைக்கு நேற்று வருகையளித்த திரு டியோ, அங்குள்ள வசதி களைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார். தண்ணீர் விவகாரம் தொடர்பில் மலேசியாவின் புதிய அரசாங்கம் கருத்து தெரிவித்துள்ளதை அடுத்து அண்மைக் காலமாக இந்த விவகாரம் பற்றி அதிகம் பேசப்பட்டு வருகிறது.
தண்ணீர் உடன்பாட்டில் தற்போதைய விலை குறித்து மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது அதிருப்தியை வெளிப் படுத்தியிருந்தார். மலேசியாவும் சிங்கப்பூரும் தண்ணீர் விவகாரம் தொடர்பில் எந்தப் பேச்சுவார்த்தையையும் நடத் தவில்லை என்று திரு டியோ கூறினார். 'நியூவாட்டர்' எனப்படும் புது நீரைத் தயாரிக்கக் கழிவுநீரை விநியோகிக்கும் பாதாளச் சாக் கடைத் திட்டம், நமது தண்ணீர் தேவையைப் பூர்த்திசெய்ய வகைசெய்யும் நீண்டகாலத் திட்டங்களில் ஒன்று என்று அவர் சொன்னார். அதற்குத் தொடர்ச் சியான, நிலையான முதலீடு தேவை எனவும் அவர் கூறினார்.