சானா: ஏமன் நாட்டில் சண்டை நீடிக்கும் வேளையில் அங்கு போர் குற்றங்கள் அதிகரிக்கக்கூடும் என்று ஐநா மனித உரிமை குழுக்களின் நிபுணர்கள் தெரிவித் துள்ளனர். ஏமனின் அரசாங்கப் படைகளுக்கும் ஹுதி போராளி களுக்கும் இடையே சண்டை நீடிக்கும் வேளையில் ஏமன் அரசாங்கத்திற்கு ஆதரவாக சவூதி தலைமையிலான கூட் டணிப் படை தாக்குதல் நடத்தி வருகிறது. போராளிகளின் இலக்குகள் மீது கூட்டணிப் படை தாக்குதல் நடத்தியதில் மக்களில் பலர் உயிரிழந்தனர். இந்நிலையில் ஏமன் நிலவரம் குறித்த அறிக்கையை நிபுணர்கள் அடுத்த வாரம் ஐநா மனித உரிமைகள் மன்றத்திடம் தாக்கல் செய்ய வுள்ளனர். கூட்டணிப் படையின் விமானத் தாக்குதலும் கடற்படை யின் தடைகளும் போர்க் குற்றங் களாக கருதப்படலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஏமனில் சண்டை நீடிக்கும் வேளையில் அங்கிருந்து வெளியேறிய பலர் அந் நாட்டுக்கு வெளியில் உள்ள ஒரு முகாமில் தங்கி உள்ளனர். முகாமிற்கு வெளியே ஒரு பெண் தன் குழந்தையுடன் காணப்பட்டார். படம்: இபிஏ