ஜகார்த்தா: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் வெற்றிப் பயணம் தொடர்கிறது. நடப்பு வெற்றியாளரான இந்திய அணி நேற்று இலங்கையுடன் மோதியது. ஹாக்கி உலகில் இமயமான இந்தியாவின் அதிரடி ஆட்டத் துக்கு முன்னால் இலங்கை மடுவாகவே காட்சியளித்தது. மடை திறந்த வெள்ளம் போல தொடர்ந்து கோல்களைப் போட்ட இந்தியாவைச் சமாளிக்க முடியாமல் இறுதியில் 20=0 எனும் கோல் கணக்கில் சுருண்டது இலங்கை. ஆட்டம் முழுதும் இந்தியா ஆதிக்கம் செலுத்த, இலங்கையால் ஒரு முறைகூட பந்தை வலை நோக்கி அனுப்ப முடியவில்லை. அதுமட்டுமல்லாது, இலங் கைக்கு ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்புகூட கிடைக்கவில்லை. இதுவரை களமிறங்கிய அனைத்து முதல் சுற்று ஆட்டங்களிலும் வாகை சூடிய இந்தியா, 'ஏ' பிரிவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
எவ்வளவு முயன்றும் இந்தியாவின் சிம்ரன்ஜீத் சிங்கிடமிருந்து (இடது) பந்தைப் பறிக்க முடியாமல் தவிக்கும் இலங்கை வீரர்கள். படம்: ஏஎஃப்பி