சிங்கப்பூரின் பிரபல ஹலால் உணவகமான 'த லாண்ட்மார்க்' அசுத்தமான உணவை விற்றதற் காகவும் உணவகத்தைத் தூய்மை யாக வைக்கத் தவறியதற்காகவும் இரண்டு வாரக் காலம் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விக்டோரியா ஸ்திரீட்டில் உள்ள வில்லேஜ் ஹோட்டல் பூகிசில் ஐந்தாவது மாடியில் 'த லாண்ட்மார்க்' செயல்படுகிறது. செப்டம்பர் 10ஆம் தேதி வரை அந்த உணவகத்தை மூட தேசிய சுற்றுப்புற ஆணையம் உத்தரவிட் டுள்ளது.
இதன் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் கடந்த ஓராண்டில் 16 குற்றப்புள்ளிகளைப் பெற்ற தால் உணவத்தின் உரிமம் தற் காலிகமாக ரத்து செய்யப்படு வதாக ஆணையம் குறிப்பிட்டது. 'த லாண்ட்மார்க்' உணவகத் துக்கு ஆயிரம் வெள்ளி அப ராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே 'த லாண்ட் மார்க்' உணவகத்தின் இணையத் தளத்தில் வெளியிடப்பட்ட தக வலில் சிங்கப்பூரிலேயே சிறந்த ஹலால் 'புஃபே' உணவை வழங் குவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மதிய உணவு, இரவு உணவின் விலை பெரியவர்களுக்கு $30++, $40++ என்றும் தெரிவிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு பேட்டியளித்த உண வகத்தின் பேச்சாளர் ஒருவர், ஐஸ் மீது வைக்கப்பட்ட கடலுணவு ஆணையத்தின் சோதனையில் தவறிவிட்டதாகத் தெரிவித்தார். இதற்கு 'ஓயிஸ்டர்', 'ஸ்கேலப்' போன்ற உணவு வகைகள் முக்கிய காரணமாக இருக்கலாம் என்று அந்தப் பேச்சாளர் சொன்னார்.
'த லாண்ட்மார்க்' எனும் பிரபல ஹலால் உணவகத்தின் தோற்றம். படம்: த லாண்ட்மார்க்