ஃபாரஸ்ட் சிட்டி விவகாரம்: பின்வாங்கிய மலேசிய அமைச்சர்

கோலாலம்பூர்: ஜோகூர் பாருவில் திட்டமிடப்பட்டுள்ள பாரஸ்ட் சிட்டி நகர மேம்பாட்டுத் திட் டத்தின் கீழ் கட்டப்படும் பங்களா வீடுகள், அடுக்குமாடி வீடுகள், மாளிகை போன்ற பெரிய வீடுகள் ஆகியவற்றை வெளிநாட்டினருக்கு கன்ட்ரி கார்டன் நிறுவனம் விற்க முடியுமா என்பது பற்றி இன்னும் தீர்மானிக்கவில்லை என்று மலேசிய வீடமைப்புத் துறை அமைச்சர் ஸுரைய்டா கமருதின் கூறியுள்ளார். 100 பில்லியன் அமெரிக்க டாலர் (S$136 பில்லியன்) செலவில் ஜோகூரில் புதிய நகரம் உரு வாக்கப்படவுள்ளது. சீனாவின் கன்ட்ரி கார்டன் நிறுவனம் புதிய நகரை உருவாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது. இந்நிலையில் புதிய நகரில் கட்டப்படும் வீடுகள் வெளி நாட்டினருக்கு விற்கப்பட மாட்டாது என்று மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாதீரின் அந்த அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாக ஜோகூர் தெரிவித்தது.

புதிய கட்டுப்பாடு பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் மத்திய அரசாங்கம் இதுபற்றி தங்களிடம் எதுவும் கூறவில்லை என்றும் ஜோகூர் மாநில நிர்வாக மன்றத்தின் உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!